உயிர் நண்பனே இளம் தோழியே !

 

உயிர் நண்பனே இளம் தோழியே !

உந்தன் வாலிபம் இயேசு ஒருவருக்கே !

 

உந்தன் வார்த்தையில் உந்தன் நடக்கையில்

உந்தன் அன்பினில் உந்தன் ஆவியில்

விசுவாசம்; கற்பிலும் முன்மாதிரி நீயே - உயிர் நண்பனே

 

சுரியன் சந்திரன் அந்தகாரமடையுமே

ஒளிவீசும் வாலிபம் அதுபோல மங்கிடுமே

கால்கள் தள்ளாடும் கண்கள் இருண்டுபோகும்

உன் சிருஷ்டிகரை இன்றே ஏற்றுக்கொள்

இயேசுவை இன்றே ஏற்றுக்கொள் நண்பனேஉயிர் நண்பனே

 

எந்திரம்போன்ற பற்கள் விழுந்துபோகுமே

மலர்போன்ற உதடுகள் உலர்ந்து போகுமே

கீதம் பாடும் குரல் வளங்கள்  குறைந்துவிடும்

செயல்படு இயேசுவுக்காய் இன்றே

எழும்பிடு நண்பா நீ எழும்பிடுஉயிர் நண்பனே

 

அச்சமும் பயமும் வழியினில் தோன்றுமே

பெலத்தின் நாட்களெல்லாம் மறைந்தேபோகுமே

ஆசைகள் அழிந்திடும் பசியும் மறைந்திடும்

தீங்கு நாட்கள் வரும் நண்பனே

இயேசுவுக்காய் எழும்பிடு நண்பனே - உயிர் நண்பனே